கிள்ளை மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
ADDED :3416 days ago
கிள்ளை: கிள்ளை, குச்சிப்பாளையம் காளியம்மன், முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. விழாவையொட்டி, கடந்த 8ம் தேதி காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்குப் பின் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. நேற்று முன்தினம் 11ம் காலை சந்தனக்காப்பு அலங்காரமும் மாலை தீ மிதி உற்சவமும் நடந்தது. இதில் சுற்றுப்பகுதியினர் பங்கேற்று தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 9:00 மணிக்கு ஊஞ்சல் உற்வசவ நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.