22ல் நாகாத்தம்மனுக்கு கும்பாபிஷேகம்
ADDED :3416 days ago
கடம்பத்துார்: கடம்பத்துாரில், வரும் 22ம் தேதி, நாகாத்தம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கடம்பத்துார் அடுத்த, கசவநல்லாத்துாரில் உள்ளது புத்து கருமாரியம்மன் கோவில். இந்த கோவில், 21 அடி உயரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நாகாத்தம்மனுக்கு, வரும் 22ம் தேதி, மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையடுத்து, வரும், 21ம் தேதி காலை கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் மற்றும் பூர்ணாஹூதியும், மாலை 5:30 மணிக்கு முதல் கால யாக பூஜையும் நடைபெறும். பின், 22ம் தேதி காலை 5:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், அதை தொடர்ந்து, காலை 6:00 மணி முதல், 7:30 மணிக்குள் நாகாத்தம்மனுக்கு மகா கும்பாபிஷேகமும், சிறப்பு அபிஷேகமும் நடைபெறும். பின், இரவு 7:00 மணிக்கு, மலர் அலங்காரத்தில், நாகாத்தம்மன் வீதியுலா நடைபெறும்.