உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமானுஜர் ஆயிரமாவது திருநாளை மத்திய, மாநில அரசு கொண்டாட மனு!

ராமானுஜர் ஆயிரமாவது திருநாளை மத்திய, மாநில அரசு கொண்டாட மனு!

விழுப்புரம்: ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது திருநட்சத்திர திருநாளை மத்திய, மாநில அரசுகள் கொண்டாட  வேண்டும் என்பதை வலியுறுத்தி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.  இதுகுறித்து, இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் செஞ்சிராஜா தலைமையில் கலெக்டரிடம் அளித்துள்ள  மனுவில் கூறியிருப்பதாவது; ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது திருநட்சத்திர திருநாளை மத்திய, மாநில அரசுகள் கொண்டாட வேண்டும். நாணயம் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் உள்ள ராமானுஜரின் உடலை பாதுகாக்க வேண்டும். ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜருக்கு மரியாதை செய்யும் வகையில் அரசு விழா எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், திருக்கோவிலுார் ராமனுஜர் மலை யின் அருகே சர்ச் கட்டுவதை அரசு கவனத்தில் கொண்டு  நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !