குதிரைமரம் பார்த்து இருக்கீங்களா!
ADDED :3580 days ago
அரசமரத்திற்கு சமஸ்கிருதத்தில் அஸ்வத்தம் என பெயருண்டு. அஸ்வத்தம் என்றால் குதிரை. தேவர்கள் செய்யும் யாகத்தில் இடும் திரவியங்களை தெய்வங்களிடம் சேர்க்கும் பணி அக்னிக்குரியதாக இருந்தது. இந்த பணியைத் தொடர்ந்து செய்வதில் விருப்பமில்லாத அக்னி தேவலோகத்தில் இ ருந்து ஓடத்தொடங்கினார். தேவர்கள் பின்தொடர்ந்தனர். குதிரையாக மாறிய அக்னி, அரசமரத்தில் ஒளிந்து கொண்டார். அதனால், அரசமரத்திற்கு அஸ்வத்தம் என்ற பெயர் ஏற்பட்டது. பகவத்கீதையில் கிருஷ்ணர் மரங்களில் நான் அரசு என்று குறிப்பிட்டுள்ளார். அரசமரத்தை சிவாம்சமாக அஸ்வத்தேஸ்வரர் என்றும், விஷ்ணுவின் அம்சமாக அஸ்வத்த நாராயணன் என்றும் சொல்வர். இதனை சனிக்கிழமை களில் ஏழுமுறை வலம் வந்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்.