சின்னாளபட்டி ஊர்காவல் சாமி கோயில் திருவிழா
ADDED :3484 days ago
சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் சக்திகாளியம்மன், முனியப்பன், ஊர்காவல்சாமி கோயில் திருவிழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி அழைப்பு நடந்தது. இதற்காக விரதமிருந்த ஏராளமான பக்தர்கள், பிருந்தாவனம் தோப்பில் இருந்து அக்னிச்சட்டி எடுத்து வந்தனர். அக்னிச்சட்டி, முளைப்பாரி ஊர்வலத்துடன் அம்மன் புறப்பாடு நடந்தது. கோயிலில் சுவாமிக்கு சிறப்பு மலர் அலங்காரத்துடன் விசேஷ பூஜைகள் நடந்தது. கிராம பொங்கல் வழிபாடு, மாவிளக்கு எடுத்தல், ஆன்மிக கலைநிகழ்ச்சிகள் நடந்தது. பரம்பரை நாட்டாமை அழகர்சாமி, விழா கமிட்டி செயலாளர் அழகர்சாமி, சமூக தலைவர் பெருமாள் தலைமையிலான குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.