பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாதி சிறப்பு ஹோமம்!
ADDED :3747 days ago
விழுப்புரம்: சுவாதி நட்சத்திரத்தையொட்டி, பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சிறப்பு ஹோமம் நடந்தது. விழுப்புரம் அடுத்த பூ வரசங்குப்பம், அமிர்தவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்மர் கோவிலில், நேற்று காலை 6.00௦ முதல், 7.00 மணி வரை, சிறப்பு திருமஞ்சனம், 8.00மணிக்கு, தங்கக்கவசம் சாற்றி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, யாகமேடையில் சிறப்பு சங்கல்பம், ஹோமம் துவங்கியது. அதில், சுவாமிக்கு சுதர்சன, தன்வந்திரி, உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டன. பகல் 12.00 மணியளவில், வசுதரா ஹோமம், மகா பூர்ணாஹூதி, கலச புறப்பாடும், பி ற்பகல் 1.00மணிக்கு, லட்சுமி நரசிம்மர் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது. விழா ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, கோவில் அர்ச்சகர் பார்த்தசாரதி மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.