ராமாயண மாதத்தில் தரிசனம் செய்ய 4 கோயில்கள்!
கோட்டயம்: ராமாயண மாதமாக கருதப்படும் ஆடி மாதத்தில், கேரளா மாநிலத்தின் நான்கு கோயில்களை ஒரே நாளில் தரிசித்தால் புண்ணியம், வாழ்க்கை முன்னேற்றத்திற்கு வழி கிடைக்கும் என கருதப்படுகிறது. ஜூலை 16 முதல் ஆக.16 வரையிலான ஆடிமாதம், கேரளாவில் ராமாயண மாதமாக கருதப்படுகிறது. ராமாயணத்தில் தசரதனின் மகன்களான ராமன், பரதன், லட்சுமணன், சத்ருகனன், கோயில்களை ஒரே நாளில் தரிசனம் செய்வது புண்ணியம் என்பது ஐதீகம். கேரளா மாநிலத்தில் திருச்சூர் திருப்பிரயாறில் ராமனும், இரிஞ்ஞால குடையில் பரதனும், எர்ணாகுளம் மூழிக்குளத்தில் லட்சுமணனும், திருச்சூர் பாயம்மலில் சத்துருக்கனுக்கும் கோயில்கள் அருகருகே உள்ளதால் இக்கோயில்களை ஒரே நாளில் தரிசனம் செய்வது எளிது. பூஜை விபரங்களுக்கு திருப்பிரயாறு ராமன் கோயிலுக்கு 0487- 239 1375, இரிஞ்ஞால குடை பரதன் கோயிலுக்கு 0480- 282 2631, மூழிக்குளம் லட்சுமணன் கோயிலுக்கு 094002 00605, பாயம்மன் கோயில் சத்ருகன் கோயிலுக்கு 0480- 329 1396 தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.