உடுமலை அருகே இரண்டு கோவில்களில் கும்பாபிேஷகம்
உடுமலை: உடுமலை அருகே, இரண்டு கோவில்களில் இன்று கும்பாபிேஷகம் நடக்கிறது. உடுமலை அருகே, ஆர்.வேலுார் கிராமத்தில் கோபாலகிருஷ்ணசுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கும்பாபிேஷக விழா நேற்று துவங்கியது. விழாவில் இன்று காலை, 4:30 மணிக்கு இரண்டாம் கால ேஹாமங்களும், காலை, 5:00 மணி முதல் 6:30 மணி வரை விமான கோபுரம், மூலமூர்த்திகளுக்கு மகா கும்பாபிேஷகமும் நடக்கிறது. தொடர்ந்து அபிேஷகம், அலங்கார பூஜைகள் இடம்பெறுகின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை ஆர்.வேலுார் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
உடுமலை அணிக்கடவு ராமச்சந்திராபுரத்தில் வைத்தியநாத பெருமான், முத்து விநாயகப்பெருமான், செல்வ முத்துக்குமாரசாமி, மாகாளியம்மன், மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இக்கோவில்களில் புதிய திருப்பணிகள் நடந்தன. இக்கோவிலில் கும்பாபிேஷக விழா கடந்த 11ம் தேதி திருவிளக்கு வழிபாட்டுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, கோவிலில் காலை, 9:00 முதல் 10:00 மணிக்குள் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடக்கிறது. தொடர்ந்து பேரொளி வழிபாடு, அன்னம்பாலிப்பு இடம் பெறுகின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர், ஊர்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.