உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூலுார் பரமசிவன் கோவில் கும்பாபிஷேகம்

சூலுார் பரமசிவன் கோவில் கும்பாபிஷேகம்

சூலுார்: சூலுார் அருகே காங்கயம்பாளையத்தில் பழமையான பரமசிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 1978ல் முதல்முறையாக கும்பாபிஷேகம் நடந்தது. இப்போது, சாலகோபுரமும், கன்னிமூல விநாயகர் சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளது. கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபத்திற்கு கிரேனைட் தளம் அமைத்து, வர்ணம் தீட்டி திருப்பணி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நான்காவது முறையாக கும்பாபிஷேக விழா, 7ம் தேதி காலையில், கணபதி வழிபாடுடன் துவங்கியது. மாலையில் முதற்கால வேள்வி பூஜை துவங்கியது. இரண்டாம் நாள் வேத பாராயணம், மூலிகை பொருட்கள் சமர்ப்பித்தல் நடந்தது. மூன்றாம் நாள் கலசம் வைத்தல், திருமுறை பண்ணிசை இசைத்தல் நடந்தது. நேற்றுமுன் தினம் காலை ஆறாம் கால வேள்வி நடந்தது. காலை 8:15 மணிக்கு, மூல விமானம், கணபதி, நவகோள்கள், பரிவார மூர்த்திகள் மற்றும் பரமசிவ பெருமானுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் தச தரிசனமும், அன்னதானம் வழங்குதலும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தமிழ்முறைப்படி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !