திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் வருடாபிஷேகம்
ADDED :3413 days ago
திருநகர்: மதுரை திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள மீனாட்சி அம்மனுக்கு வருடாபிஷேகம் நேற்று நடந்தது. காலையில் அம்மனுக்கு 108 அபிஷேகங்களும், 108 அபிராமி அந்தாதி பாடல்களும் பாடப்பட்டன. புனிதநீர் அபிஷேகம் முடிந்து தீபாராதனை நடந்தது.