உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தச்சம்பத்து காளியம்மன் கோயிலில் ஆனி உற்சவம்!

தச்சம்பத்து காளியம்மன் கோயிலில் ஆனி உற்சவம்!

திருவேடகம்: சோழவந்தான் அருகே தச்சம்பத்து காளியம்மன் கோயில் பொங்கல்முளைப்பாரி ஆனிஉற்சவவிழா 8 நாட்கள் நடந்தது. இக்கோயிலில் ஜூலை 6 ல் மாலை கொடியேற்றத்துடன் ஆனிஉற்சவம் துவங்கியது. தினமும் அம்மன் சந்தனக்காப்பு அலங்கரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று காலை திருவேடகம்க வைகை ஆற்றில் பக்தர்கள் மஞ்சள்நீராடி அக்னிச்சட்டி மற்றும் சக்திகரகம் எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு பெண்கள் முளைப்பாரி எடுத்து ஆற்றில் கரைத்து, பொங்கல் படைத்து பூஜை செய்தனர். இன்று பக்தர்கள் சுந்தரராஜபெருமாள் கோயில் மற்றும் பரிவாரதெய்வங்களுக்கு மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வர, அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தச்சம்பத்து,பாலகிருஷ்ணாபுரம் விழாகுழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !