நெல்லிக்குப்பம் ஐயப்பன் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா
ADDED :3408 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருள் தரும் ஐயப்பன் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது. இக்கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழாவை முன்னிட்டு கணபதி நவகிரக ஹோமம் நடந்தது. தொடர்ந்து, 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பப்பட்டு சிறப்பு யாகம் நடந்தது. ஐயப்பனுக்கு சங்காபி ஷேகமும் பூர்ணாகுதி தீபாராதனை மற்றும் அஸ்டதச அபிஷேகம் நடந்தது. இரவு ஐயப்பன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூ ஜைகளை முருகானந்தம் குருக்கள் செய்தார். ரமணர் அன்னதான குழு சார்பில் கந்தசாமி அன்னதானம் வழங்கினார்.