வலம்புரி வெற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :3407 days ago
வடமதுரை: வடமதுரை பேரூராட்சி வி.குரும்பபட்டியில் வலம்புரி வெற்றி விநாயகர், லிங்கோத்பவர், ராமபக்த ஆஞ்சநேயர், துர்க்கையம்மன், தட்சணாமூர்த்தி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்றுமுன்தினம் மாலை தீர்த்த குடங்கள் அழைப்புடன் முதல் கால யாக பூஜைகள் துவங்கி நடந்தன. நேற்று காலை இரண்டாம் கால பூஜைகளை தொடர்ந்து கடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. வடமதுரை ஆதிநாத பெருமாள் கோயில் அர்ச்சகர் வெங்கடேச அய்யர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத் தார். குரும்பபட்டி, சித்துார், மொட்டணம்பட்டி, சிட்டம்பட்டி, குஞ்சாகவுண்டனுார் மற்றும் சுற்றுப்பகுதியினர் திரளாக பங்கேற்றனர்.