பொன்னங்குப்பத்தில் கோவில் பாலாயனம்
ADDED :3407 days ago
செஞ்சி: பொன்னங்குப்பம் மாரியம்மன் கோவிலில், பாலாயனம் செய்தனர். செஞ்சி தாலுகா பொன்னங்குப்பத்தில் உள்ள விநாயகர், மாரியம்மன், அய்யனாரப்பன் கோவிலில் திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதையடுத்து திருப்பணிகளை செய்வதற்காக நேற்று பாலாயனம் செய்தனர். காலை 11 மணிக்கு கணபதி ஹோமம், விசேஷ திரவிய ஹோமம் நடந்தது. பூஜைகளை செல்லபிராட்டை ஈஸ்வர சி வன் செய்தார். இதில் முன்னாள் ஊராட்சி தலைவர் பாபு சிங், திருப்பணி குழவினர் பெருமாள் நாட்டார், நாகராஜ், ராஜா, ஜெயராம்சிங், ராமர், சுதாகர் மற்றும் கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர்.