உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

பெ.நா.பாளையம்:  துடியலுார் அருகே வடமதுரையில் உள்ள மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இங்கு அருள்மிகு மாரியம்மன்,  மற்றும் விளையாட்டு மாரியம்மன் கோவில்கள் புதியதாக எழுப்பப்பட்டுள்ளன. விழாவையொட்டி, முதல் கால யாக பூஜை, வேள்வி, கணபதி ÷ ஹாமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி பூஜை, முளைப்பாரி எடுத்தல் உள்ளிட்டவை நடந்தன. நிகழ்ச்சியில், குமரகுருபர சுவாமிகள் ஆசியுரை  வழங்கினார். தொடர்ந்து மாரியம்மன், விளையாட்டு மாரியம்மன், பாலவிநாயகர், பாலமுருகன், முனியப்பன் சன்னதிகளில் கும்பாபிஷேகம் நடந் தது. மதியம் அன்னதானம் நடந்தது. குருடம்பாளையம் ஊராட்சி தலைவர் ரவி, முன்னாள் தலைவர் மணி உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !