பெரியநெசலுாரில் தேர் திருவிழா
ADDED :3406 days ago
சிறுபாக்கம்: வேப்பூர் அடுத்த பெரியநெசலுார் மங்கமுத்தாயி அம்மன் கோவிலில் தேர் திருவிழா நடந்தது. கடந்த 5ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. தினமும் அம்மனுக்கு காலை அபிஷேகம், இரவு வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வான நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு வழிபாடும், தொடர்ந்து மாலை 5:00 மணியளவில் அலங்கரித்த தேரில் அம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தார். ஏராளமானோர் தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.