உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 19ல் சாய்பாபா கோவிலில் குரு பூர்ணிமா வியாசர் விழா

19ல் சாய்பாபா கோவிலில் குரு பூர்ணிமா வியாசர் விழா

மணவாள நகர்:ஒண்டிக்குப்பத்தில் உள்ள சாய்பாபா கோவிலில், வரும், 19ம் தேதி, குரு பூர்ணிமா வியாசர் விழா நடைபெற உள்ளது. திருவள்ளூர் அடுத்த, மணவாள நகர், ஒண்டிக்குப்பத்தில் உள்ளது சமர்த்த சாய்பாபா கோவில். இங்கு, வரும், 19ம் தேதி, குரு பூர்ணிமா வியாசர் விழா நடைபெற உள்ளது. முன்னதாக அன்று, காலை 6:30 மணிக்கு காகட ஆரத்தியும், காலை 7:30 மணிக்கு தத்தாரேய ஸ்வரூப சாயி நாதர் ஹோமமும், தொடர்ந்து காலை 10:30 மணிக்கு, பக்தர்களால் பாலாபிஷேகமும் நடைபெறும். பின், மதியம் 12:30 மணிக்கு மதிய ஆரத்தியும், மாலை 6:00 மணிக்கு துாப் ஆரத்தியும், இரவு 7:15 மணிக்கு சத்தியநாராயண பூஜையும் நடைபெறும். இரவு 8:00 மணிக்கு, சிறப்பு மலர் அலங்காரத்தில் சாய் பாபா பல்லக்கு ஊர்வலமும், இரவு 9:30 மணிக்கு, சேஜ் ஆரத்தியும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !