காரமடை அரங்கநாதர் கோவிலுக்கு புதிய பிரபாவளி!
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலுக்கு, அழகான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த புதிய பிரபாவளி வழங்கப்பட்டது. காரமடை அரங்கநாதர் கோவிலில், 200 ஆண்டுகள் பழமையான பிரபாவளி (உற்சவர் சுவாமிக்கு பின்புறம் வைக்கப்படும் வளைவு) ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாத பெருமாள் சுவாமி திருவீதி உலாவின்போது, பயன்படுத்தப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக இதை பயன்படுத்தியதால், பழுதடைந் துள்ளது. காரமடை தண்டபாணி-– சித்ரா குடும்பத்தினர் புதிய பிரபாவளி செய்ய, பர்மா தேக்கு மரம் வழங்கினர். அரங்கநாதர் கோவில் ராஜகோபுர கதவை செய்த, ஸ்தபதி ராதாகிருஷ்ணன், அழகான சிற்ப வேலைப்பாடுகளுடன், புதிய பிரபாவளியை செய்து முடித்தார். இதை கோவிலுக்கு ஒப் படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஸ்தபதி ராதாகிருஷ்ணன் கூறுகையில்,“புதிய பிரபாவளி மூன்று பகுதிகளாக இணைக்கப்பட்டுள்ளன. உச்சியில் உள்ள ஒரு உருவ பொம்மையில், மச்சம், யாளி, யானை ஆகிய மூன்று உருவங்கள் தெரியும் வகையில் செதுக்கப்பட்டுள்ளது. இரு பக்கம் சங்கு, சக்கரமும், எட்டு திசைகளுக்கு தெரியும் வகையில், யாளி உருவ பொம்மைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன,” என்றார்.