பாண்டுரங்கர் கோவிலில் ஏகாதசி விழா ஆராதனை
ADDED :3392 days ago
குமாரபாளையம்: குமாரபாளையம் பாண்டுரங்கர் கோவிலில், ஏகாதசி விழா மற்றும் சிறப்பு ஆராதனை நடந்தது. குமாரபாளையம் விட்டலபுரி, பாண்டுரங்கர் கோவிலில், 89வது ஆண்டு ஆசாட சுத்த சயன ஏகாதசி விழா, கடந்த, 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை பண்டரிநாதர் சுவாமிக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடந்தன. இரவு, 7 மணி முதல் சிறப்பு பஜனை நடந்தது. இன்று காலை காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் கருட தரிசனம் நடக்கிறது. பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.