வருணீஸ்வரர் கோவிலில் சுவாமி திருவீதி உலா
ADDED :3392 days ago
அரூர்: அரூர், வருணீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, நாளை சிவனடியார்கள் திருவாசகம் பாடி ஆடித் திரண்டு வர, திருப்பல்லக்கில் சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது. அரூர் பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள, அன்னை வருணீஸ்வரி உடனமர் வருணீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழாவை முன்னிட்டு, நாளை காலை, 5.30 மணிக்கு திருப்பள்ளியெழுச்சிப் பாடி சிறப்பு வழிபாடு செய்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 8.30 மணிக்கு சிவனடியார்கள் திருவாசகம் பாடியும், ஆடியும் திரண்டு வர திருப்பல்லக்கில் சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மதியம், 2 மணிக்கு ஆன்மிக இலக்கிய சொற்பொழிவும், 4 மணிக்கு பிரதோஷ வழிபாடும் நடக்கிறது.