உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாண்டுரங்க ருக்மணி கோவில் பிரம்மோற்சவ விழா துவக்கம்

பாண்டுரங்க ருக்மணி கோவில் பிரம்மோற்சவ விழா துவக்கம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த அக்ரஹாரம் சிவாஜி நகரில் உள்ள விட்டல் ரகுமாயி, பாண்டுரங்கர் கோவிலிலும், மாதா அம்பா பவானி கோவிலிலும் பிரமோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, நேற்று கணபதி ஹோமம், நவக்கிரக பூஜை, விட்டல் ரகுமாயி, அம்பா பவானிக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இரவு, 7 மணிக்கு விட்டல் ரகுமாயி உற்சவமூர்த்தி ஊர்வலம் நடந்தது. வரும், 19ம் தேதி இரவு, 10 மணிக்கு கோபால காலா பண்டரி பஜனையும், 20ம் தேதி காலை, 10 மணிக்கு விட்டல் ரகுமாயி திருக்கல்யாணமும், மாலை, 5 மணிக்கு தேர் அலங்காரத்துடன் உற்சவ மூர்த்திகள் கிருஷ்ணகிரி நகரில் நகர்வலமும் நடக்கிறது. விழா நடைபெறும், ஏழு நாட்களும் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, பாண்டுரங்க ருக்மணி பக்தமண்டலி மற்றும் ஊர்பொதுமக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !