சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆந்திர அமைச்சர் சுவாமி தரிசனம்
ADDED :3379 days ago
சிதம்பரம்: ஆந்திர மாநில அமைச்சர், சிதம்பரம் நடராஜர் கோவிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். ஆந்திரா மாநில தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் விஜயரகுநாதரெட்டி, குடும்பத்துடன் நேற்று காலை சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தார். அவரை, சிதம்பரம் ஆர்.டி.ஓ., விஜயலட்சுமி உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர், அமைச்சர் குடும்பத்துடன் சென்று கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு, கோவில் தீட்சதர்கள் சிறப்பு வரவேற்பளித்து, பிரசாதம் வழங்கினர். பின்னர், நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு அமைச்சர் புறப்பட்டுச் சென்றார்.