உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொக்காபுரம் மாரியம்மன் கோவில் கரக உற்சவ விழா

பொக்காபுரம் மாரியம்மன் கோவில் கரக உற்சவ விழா

ஊட்டி: ஊட்டி நொண்டிமேடில் உள்ள பொக்காபுரம் மாரியம்மன் அருள்பீடத்தின், இரண்டாம் ஆண்டு தேர்த் திருவிழா, நான்காம் ஆண்டு கரக உற்சவ விழா, கடந்த, 15ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை, 10:00 மணிக்கு, ஊட்டி மாரியம்மன் கோவிலில் இருந்து, தேர் மற்றும் கரகம், தாரை தப்பட்டை முழங்க, பக்தர்களின் பக்தி முழக்கத்திற்கு இடையே, பொக்காபுரம் மாரியம்மன் அருள்பீடத்துக்கு அழைத்து வரப்பட்டது. பின், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இன்று, பகல், 12:00 மணிக்கு, அம்மன் தாலாட்டு, மாலை, 6:00 மணிக்கு விளக்கு பூஜை நடத்தப்படுகின்றன. நாளை, பகல், 12:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு, மதியம், 1:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை, 6:00 மணிக்கு சிறப்பு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !