திருக்கழுக்குன்றத்தில் பக்தர்கள் உழவாரப்பணி
ADDED :3377 days ago
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் கோவிலில், சென்னை பக்தர்கள், நேற்று உழவாரப்பணி மேற்கொண்டனர். திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், ஆகஸ்ட், 2ம் தேதி, சங்குதீர்த்த புஷ்கரமேளா மற்றும் லட்சதீப விழா நடைபெற உள்ளது. இதையொட்டி கோவிலை துாய்மைப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. சென்னை, திருவான்மியூரைச் சேர்ந்த சிவ பக்தர்கள், உழவார பணியாக, இங்குள்ள பக்தவத்சலேஸ்வரர் கோவிலை நேற்று துாய்மைப்படுத்தினர். சங்குதீர்த்த குள படிகளில் வளர்ந்திருந்த சிறு செடிகளையும் அகற்றினர்.