தேவி கருமாரி அம்மன் கோவிலில் 22ம் தேதி செடல்
ADDED :3376 days ago
கடலுார்: கடலுார் மஞ்சக்குப்பம் ஆஸ்பிட்டல் சாலையில் உள்ள தேவி கருமாரி அம்மன் கோவிலில் செடல் வரும் 22ம் தேதி நடக்கிறது. அதனையொட்டி அன்று காலை 7:00 மணிக்கு பெண்ணை ஆற்றில் இருந்து கரகம் கொண்டு வருதல், பகல் 12:00 மணிக்கு சாகை வார்த்தல், மதியம் 2:00 மணிக்கு செடல், மாலை 5:00 மணிக்கு சந்தன காப்பு அலங்காரம், தீபாராதனை, இரவு 8:00 மணிக்கு கும்பம் கொட்டுதல், 9:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடக்கிறது. 23ம் தேதி இரவு 7:00 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு, 24ம் தேதி காலை 9:00 மணிக்கு அம்மன் வீதியுலா, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.