திருமலையில் ஆதார் கட்டாயம்
ADDED :3376 days ago
திருப்பதி: திருமலையில் வேலை செய்ய, ஆதார் அட்டை கட்டாயமாகிறது. திருமலையில் உள்ள உணவகங்கள், கடைகளில், பல பகுதிகளில் இருந்து வருவோர் வேலை செய்கின்றனர். திருமலையின் பாதுகாப்பு கருதி, திருமலையில் வேலை செய்வோருக்கு, ஆதார் அட்டையை கட்டாயமாக்க, போலீசார் முடிவு செய்துள்ளனர்.திருமலையில் உள்ள கடைகள், உணவகங்களில் வேலை செய்வோரிடம் ஆதார் அட்டை உள்ளதா என, சோதனை நடந்து வருகிறது. ஆதார் அட்டை உள்ளவர்களை மட்டுமே வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்; ஆதார் அட்டை இல்லாதவர்களை உடனடியாக வேலையில் இருந்து நீக்க வேண்டும் என, கடை உரிமையாளர்களுக்கு, போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.