கள்ளக்குறிச்சி முத்து மாரியம்மன் கோவிலில் கொடியேற்ற விழா
ADDED :3375 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி முத்து மாரியம்மன் கோவிலில் கொடியேற்ற விழா நடந்தது. கள்ளக்குறிச்சி மந்தைவெளி முத்து மாரியம்மன் கோவிலில் ஆடித் தேரோட்ட திருவிழா துவங்கியது. அதனையொட்டி மூலவர், உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தினர். கொடிக்கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டது. மாலையில் கோவில் மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு காப்பு கட்டினர். தொடர்ந்து 12 நாட்களுக்கு வீதியுலா உற்சவம் நடக்கிறது.