உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூர் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

கரூர் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

கரூர்: கரூர் மாவட்ட சிவன் கோவில்கள் மற்றும் பல்வேறு கோவில்களில் உள்ள நந்தியம்பெருமானுக்கு நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தன. கரூர் நகரில் ஈஸ்வரன் கோவில், குளித்தலை கடம்பர் கோவில், அய்யர்மலை சிவன் கோவில், ரங்கமலை மல்லீஸ்வரர் கோவில், வியாக்ரபுரீஸ்வரர் கோவில், கிருஷ்ணராயபுரம் திருக்கண்மல்லீஸ்வரர் கோவில், டி.என்.பி.எல்., குடியிருப்பில் உள்ள வல்லபை கணபதி கோவில், மண்மங்கலம் மரகதவள்ளி அம்பிகை மணிகண்டேஸ்வரர் கோவில், நன்செய்புகழூர் மேகபாலீஸ்வரர் கோவில். புன்செய் தோட்டக்குறிச்சி மேட்டுப்பாளையம் சிவன் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் நந்திக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது.நன்செய்புகழூர் மேகபாலீஸ்வரர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலை மூன்று முறை சுற்றி வந்தார். மாவட்டம் முழுவதும், நந்தியம்பெருமானுக்கு பல்வேறு அபிஷேகங்களுடன் கோலாகலமாக பிரதோஷம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !