கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் சிவனடியார் கூட்ட 23ம் ஆண்டு விழா
ADDED :3374 days ago
கரூர்: கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில், கருவூர் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், 63 நாயன்மார்கள் விழா நடந்தது. இதில், நேற்று முன்தினம் காலை, 6 மணி முதல் பிற்பகல், 12 மணி வரை சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவமும், மாலையில், 63 நாயன்மார்களுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, நேற்று புகழ்ச்சோழர் மண்டபத்தில் சிவனடியார் திருக்கூட்டத்தின், 23ம் ஆண்டு விழா நடந்தது. அதில், கரூர் சபரீசன் சித்தாஸ்ரமம் தலைவர் பாண்டுரங்கசாமி தலைமை வகித்தார். இங்கு பல்வேறு ஆன்மிக சொற்பொழிவாளர்கள், பல்வேறு தலைப்புகளில் பேசினர். மாலை, 4 மணிக்கு திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.