உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீரடி ஆனந்த சாயி கோவிலில் குரு பூர்ணிமா உற்சவம்

சீரடி ஆனந்த சாயி கோவிலில் குரு பூர்ணிமா உற்சவம்

உடுமலை : உடுமலை சீரடி ஸ்ரீ ஆனந்த சாயி கோவில் மற்றும் அறக்கட்டளை சார்பில் குருபூர்ணியா உற்சவம் மற்றும் மூன்றாம் ஆண்டு விழா நடக்கவுள்ளது. தில்லை நகர் பகுதியிலுள்ள கோவிலில் நாளை காலை, 5:00 மணிக்கு காக்கட ஆரத்தி மங்கள இசையுடன் துவங்குகிறது. அன்று காலை, 8:30 மணிக்கு ஆனந்த சாயி பாபாவுக்கு 16 வகை சிறப்பு அபிேஷகங்கள் நடக்கின்றன. வரும் 20ம் தேதி காலை, 7:15 மணிக்கு 108 வலம்புரி சங்காபிேஷகமும், மாலை, 5:00 மணிக்கு பாபா திருவீதியுலா, வாண வேடிக்கை, சிலம்பாட்டம் இடம்பெறுகிறது. ஜூலை 21ம் தேதி மாலை,5:30 மணிக்கு நாம சங்கீர்த்தனம் பஜனும், இரவு,7:30 மணிக்கு கோவில் வளாகத்தில் சாய்பாபா சிறப்பு பல்லாக்கு பவனியும் நடைபெறுகின்றன. விழாநாட்களில் ஸ்ரீ சாய்சத் சரித பாராயணமும், விஷ்ணுசகஸ்ர ராம பாராயணமும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !