உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்துாரில் கோயில் உற்சவ விழா

சித்துாரில் கோயில் உற்சவ விழா

வடமதுரை: வடமதுரை சித்துாரில் செல்வவிநாயகர், கருமாரியம்மன், சுயம்புகாளியம்மன், பகவதியம்மன், பெரியாண்டவர், மதுரை வீரன், ஏழுமலையான் கோயில் உற்சவ விழா ஒரு வாரம் நடந்தது. கரகம் பாலித்தல், மாவிளக்கு, எடுத்தல், பொங்கல் வைத்தல், கிடாய் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்துதல், பெரியாண்டவருக்கு தயிர் பல்லையம் படைத்தல் என பல்வேறு வழிபாடுகள் நடந்தன. நேற்று மாலை மஞ்சள் நீராட்டுடன் கரகங்கள் கங்கை செல்லும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !