அய்யனார் பெரியண்ணசாமி ஆடி சிறப்பு பூஜை
ADDED :3373 days ago
கிருஷ்ணராயபுரம்: மேலவிட்டுகட்டி அய்யனார் பெரியண்ணசாமிக்கு, ஆடி முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. லாலாப்பேட்டை மேலவிட்டுகட்டி கோவிலில், ஆடி முன்னிட்டு அய்யனார் பெரியண்ணசாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. முன்னதாக அய்யனாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, சந்தனகாப்பு அலங்காரம் செய்யபட்டது. பின், அய்யனார் பெரியண்ணசாமி குதிரை வாகனத்தில் உள்ளவாறு, மலர்களை கொண்டு அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், லாலாப்பேட்டை, விட்டுகட்டி உள்ளிட்ட பகுதி பக்தர்கள் கலந்து கொண்டனர்.