வெள்ளாளபாளையம் கோவில் கும்பாபிஷேகம்
கோபிசெட்டிபாளையம்: வெள்ளாளபாளையம் மாகாளியம்மன், ஆதிநாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கோபி வெள்ளாளபாளையம் கிராமத்தில் விநாயகர், வேங்கையம்மன், மாகாளியம்மன், மாரியம்மன், ஸ்ரீதேவி, பூதேவி, ஆதி நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மஹா கணபதி ஹோமம், பவானி கூடுதுறையில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வருதல், முதல் கால யாக பூஜை, திரவியயாகம், சிவாசார்ய சுவாமிகள் வழிபாடு, இரண்டாம் காலயாக பூஜை, அஷ்ட பந்தன மருந்து சாத்துதல், மூன்றாம் கால யாக பூஜை நடந்தன. நேற்று காலை 6 மணிக்கு நான்கால யாக பூஜை, திரவிய யாகம், 7.30 மணிக்கு மேல் விநாயகர், வேங்கையம்மாள், மாகாளியம்மன் விமானம் மூலாலயங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. 9 மணிக்கு மேல் ஆதிநாராயண பெருமாள் விமான மூலாலயங்களுக்கு கும்பாபிஷேகமும் நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.