உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பப்தமூர்த்தி சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

பப்தமூர்த்தி சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

கிள்ளை:சிதம்பரம் அருகே கிள்ளையில் கன்னியம்மன் மற்றும் பப்தமூர்த்தி சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.சிதம்பரம் அருகே கிள்ளையில் கன்னியம்மன், பப்தமூர்த்தி கோவில் புதிதாக கட்டப்பட்டு நேற்று முன்தினம் 14ம் தேதி காலை 9மணிக்கு அனுக் ஞை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து ஹோமம், ரஷ்ஷாபந்தனம், கடஸ்தாபனம், தீபாராதனையும் மாலை 6மணிக்கு முதல்கால யாக பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனையும் நடந்தது.நேற்று 15ம் தேதி காலை 7.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, கோபூஜை, தனபூஜை, ஸூவாசிநி பூஜை, தம்பதி பூஜை, கன்யாபூஜை, வடுகு பூஜை, வசோத்தாரா ஹோமம், பூர்ணாஹூதி, கடம் புறப்பாடு கும்பதத்துவா அர்ச்சனை கும்பாபிஷேகம் உடன் மகாபிஷேகம் செய்யப்பட்டது. முன்னாள் மீனவர் நலவாரிய உறுப்பினர் சத்தியமூர்த்தி, இந்திராணிகலைமணி, தொழிலதிபர் அரவிந்தரன், கிராம காரிய கமிட்டி தலைவர் நீதிமணி முன்னிலையில் சிதம்பரம் நடராஜர் கோவில் டிரஸ்டி சக்கரவர்த்தி கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !