கயத்தூர் கிராமத்தில் கும்பாபிஷேக விழா
ADDED :5133 days ago
விழுப்புரம்:விக்கிரவாண்டி அடுத்த கயத்தூர் கிராமத்தில் 5 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.கயத்தூர் கிராமத்திலுள்ள சித்தி விநாயகர், கைலாசநாதர், பெரியநாயகி, முத்துமாரியம்மன், ஐயனார் கோவில்கள் புதுப்பிக்கப்பட்டன. இக்கோவில்களின் கும்பாபிஷேக விழா கடந்த 13ம் தேதி துவங்கியது. நேற்று காலை 8.30 மணி முதல் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நடந்தது. யாக சாலை பூஜைகளை விக்கிரவாண்டி சந்திரசேகர குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் செய்து வைத்தனர். மயிலம் பொம்மபுர ஆதீனம் 20வது பட்டம் சிவஞானபாலய சுவாமி கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.