வேணுகோபால ஸ்வாமி கோவில் மஹா கும்பாபிஷேக விழா
தர்மபுரி: தர்மபுரி அக்ரஹாரத்தெரு ஸ்ரீராதாருக்மணி சமேத வேணுகோபால ஸ்வாமி கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா இன்று (செப்.,16) நடக்கிறது. இதையொட்டி நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, ஆச்சார்ய வரணம், சபா அனுக்ஞை, தேவாதா அனுக்ஞை, புண்யாகம், ரட்சாபந்தனம், வாஸ்து, நிக்பந்தனம், பலிஹரணம், பாலாலய கலாகர்சனம், யாகசால பிரவேசம், ம்ருத்ஸங்கரணம், அங்குரார்ப்பனம், கலசஸ் தாபனம், பிரதான ஹோமம், மஹா சாந்தி ஹோமம், பூர்ணாஹுதி சாற்று முறை தீபாராதøனை, சயணாதிவாஸம், கோபுர கலசம் நிறுவுதல் ஆகியவை நடந்தது. இன்று (செப்., 15) காலை இரண்டாம் கால பூஜையில் சுப்ரபாதம், திருப்பள்ளி எழுச்சி, புண்யாகம், அர்ச்சனை, நித்யாஹோமம், மஹாசாந்தி ஹோமம், பிரதான ஹோமம், பூர்ணாஹுதி சாற்று முறை தீபாராதனையும் மூன்றாம் கால யாக பூஜையில் புண்யாகம் நித்யஹோமம், மஹாசாந்தி ஹோமம், பூர்ணாஹுதி, அர்ச்சனை, சாற்று முறை, தீபாராதனை, யந்திரஸ்தாபனம், மூர்த்திகளுக்கு அஷ்டபந்தனம், மஹா சாந்தி விஷேச திருமஞ்சனம் தீபாராதனை நடக்கிறது. நாளை காலை 4.30 மணிக்கு சுப்ரபாதம், திருப்பள்ளியெழிச்சி, நித்யஹோமம், தாரா ஹோமமம், மஹா பூ;ர்ணாஹுதி, அர்ச்சனை சாற்று முறை, தீபாராதனை, யாத்ராதானம், தட்சிணாதானம், கடம் புறப்பாடு தொடர்ந்து காலை 6 மணிக்கு மேல் மூல விமானம், மூலமூர்த்தி பரிவாரங்கள், மஹா சம்ப்ரோசனம் மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 8 மணிக்கு மேல் பிரதம விஸ்வரூப தரிசனம், நித்ய ஆராதனம், தச தரிசனம், திருக்கோடி மஹா ஆசிர்வாதம், தீர்த்த பிரசாதம், சர்வதரிசனம், காலை 10 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. மாலை ஸ்ரீதேவி, பூதேவி, சமேத வேணுகோபால ஸ்வாமி திருக்கல்யாணம் மாலை 6 மணிக்கு ஸ்வாமி மற்றும் மாரியம்மன் திருவீதி உலா நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொது மக்கள் மற்றும் பட்டாச்சாரியார் அர்ச்சகர் ரவி, கண்ண பட்õடச்சாரியார் குழுவினர் கோட்டை கோவில் விஜயராகவ பட்டாச்சாரியர் ஆகியோர் செய்து வருகின்றனர்.