உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இலத்தூர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

இலத்தூர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

தென்காசி : இலத்தூர் விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இலத்தூரில் அகஸ்தியர் முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நினைத்ததை முடிக்கும் விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் திருப்பணிகள் நடந்தது. இதனையடுத்து கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நேற்று முன்தினம் துவங்கியது. காலையில் கணபதி ஹோமம், கோ பூஜை, நவக்கிரக ஹோமம் நடந்தது. மாலையில் சிறப்பு ஹோமங்கள் மற்றும் வழிபாடு, இரவு மருந்து சாத்துதல் மற்றும் சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. நேற்று காலையில் சிறப்பு ஹோமங்கள் நடந்தது. விநாயகருக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியும், உரு ஏற்றுதல் நிகழ்ச்சியும் நடந்தது. 9.30 மணிக்கு கும்பம் எழுந்தருளல் நடந்தது. பின்னர் விமான கலசத்திற்கு புனிதநீர் அபிஷேகம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனை நடந்தது. மதியம் நறுமணப் பொருட்களால் மகா அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை திரளான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழாக் கமிட்டியார் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !