எத்தனை பொட்டு வைப்பது?
ADDED :3766 days ago
திருவிளக்கு ஏற்றும் முன் விளக்கின் உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீபத்தின் பாதம் ஆகிய எட்டு இடங்களில் சந்தனம், குங்குமம் பொட்டு வைக்க வேண்டும். அவ்வாறு பொட்டு இடும் போது ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி, தான்ய லட்சுமி, கஜலட்சுமி, வீர லட்சுமி, விஜயலட்சுமி ஆகியோரின் பெயரைச் சொல்லி மனதில் தியானிக்க வேண்டும். இதனால் ஐஸ்வர்யம் பெருகும். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்கள், சூரியன், சந்திரன் ஆகிய ஏழும், ஆத்மா என்னும் உயிருக்கு (அதாவது நமக்கு) பயனுள்ள வகையில் இருக்க வேண்டும் என்று வேண்டி இந்த பொட்டுகள் இடப்படுகின்றன.