உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதியில் ஒரு நாளில் ரூ.4.69 கோடி காணிக்கை!

திருப்பதியில் ஒரு நாளில் ரூ.4.69 கோடி காணிக்கை!

திருப்பதி: திருப்பதியில், ஒரே நாளில், 4.69 கோடி ரூபாய், உண்டியல் காணிக்கையாக வசூலாகி உள்ளது. திருமலைக்கு வரும் பக்தர்கள், தரிசனம் முடிந்து திரும்பும் போது உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர். தினமும் காணிக்கை கணக்கிடப்பட்டு, வங்கியில் வரவு வைக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை முதல், திங்கட்கிழமை மாலை வரை கிடைத்த உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில், 4.69 கோடி ரூபாய் வசூலானது தெரியவந்தது. ஜூலை மாதத்தில், ஒரு நாளில் கிடைத்த அதிகபட்ச உண்டியல் வருவாய் இது என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பிரம்மோற்சவத்தின் போது, திருமலைக்கு வந்து கருட சேவையை பார்க்க முடியாத பக்தர்களுக்காக, மாதந்தோறும் கருட சேவை நடத்தப்படுகிறது. இதன்படி, பவுர்ணமி நாளான நேற்று, உற்சவ மூர்த்தியான மலையப்ப சுவாமி, கருட வாகனத்தில் மாட வீதிகளில் வலம் வந்தார். பக்தர்கள், பக்தி பரவசத்துடன் தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !