புருஷானுார் கோவிலில் 108 பால்குட ஊர்வலம்
ADDED :3366 days ago
விழுப்புரம்: புருஷானுார் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் சுமந்து வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். விழுப்புரம் அடுத்த புருஷானுார், சிங்கபுரத்து மாரியம்மன், புற்று நாகாத்தம்மன் கோவிலில் 2ம் ஆண்டு ஆடித் திருவிழா நேற்று நடந்தது. காலை 7:00 மணிக்கு சக்தி கரக ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, 11:00 மணியளவில் சிங்கபுரத்து மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியதும், 108 பால்குடம் சுமந்து பக்தர்கள் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை 4:00 மணிக்கு ஊரணி பொங்கலிட்டு பெண்கள் வழிபட்டனர். இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை, கிராம மக்கள் செய்திருந்தனர்.