நாட்டறம்பள்ளி ராமகிருஷ்ண மடத்தில் குருபூர்ணிமா விழா
ADDED :3413 days ago
வேலுார்: நாட்டறம்பள்ளி ராமகிருஷ்ண மடத்தில், குருபூர்ணிமா புண்ணிய திருநாள் விழா நேற்று நடந்தது. வேலுார் மாவட்டம், நாட்டறம்பள்ளி ராமகிருஷ்ண மடத்தில், ஆண்டுதோறும் வியாச பவுர்ணமி நாளில், குருபூர்ணிமா புண்ணிய திருநாள் விழா நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு குருபூர்ணிமா விழா, மடத்தின் தலைவர் சுவாமி தியாகராஜானந்தா தலைமையில் நேற்று நடந்தது. சிறப்பு பூஜைக்கு பின் விழாவில் கலந்து கொண்ட, 1,500க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு, பிரசாதத்துடன் அன்னதானமும் வழங்கப்பட்டது.