உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை கோவில்களில் ஆடி பவுர்ணமி சிறப்பு பூஜை

உடுமலை கோவில்களில் ஆடி பவுர்ணமி சிறப்பு பூஜை

உடுமலை: ஆடி பவுர்ணமி மற்றும் குரு பூர்ணிமாவை முன்னிட்டு உடுமலை சுற்றுப்பகுதிளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள்,  வழிபாடுகள் நடந்தது.  ஆடிமாதத்தில் வரும் பவுர்ணமி குரு பூர்ணிமாவாக கொண்டாடப்படுகிறது. உடுமலை தில்லை நகரில் உள்ள  சாய்பாபா கோவிலில் குரு பூர்ணிமா உற்சவம் நடந்தது. காலை, 5:00 மணிக்கு காக்கட ஆரத்தியுடன் தொடங்கிய உற்சவத்தில், கணபதி  ேஹாமம், தத்தாத்ரேயர் ேஹாமம், லட்சுமி ேஹாமம் மற்றும் ஆஞ்சநேயர் ஹோம் நடைபெற்றது. காலை, 8:30 மணிக்கு, பால்,  பன்னீர், சந்தனம், தேன் உட்பட, 16 வகையான அபிேஷகங்கள், மகா தீபாராதனை, ஆரத்தி மற்றும், 108 தம்பதிகள் பங்கேற்ற சத்திய  நாராயண பூஜையும் நடந்தது.

திருவிளக்கு பூஜை..
: மாலை, 5:30 மணிக்கு, 108 திருவிளக்கு பூஜையும், சாய்பாபாவுக்கு சிறப்பு அபிேஷக, அலங்காரமும் நடைபெற்றது.  பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு சிறப்பு ஆராதானையும், குழந்தைகள் பங்கேற்ற  கலைநிகழ்ச்சிகளும் நடந்தது.

முற்றோதல்...
: உடுமலை, குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில் ஆடி பவுர்ணமியையொட்டி, திருவாசகம் மற்றும் தேவாரம்  முற்றோதல் நடந்தது. பக்தர்களால் நாராயண பாராயணம் படிக்கப்பட்டது. அம்மனுக்கு, திருநீறு, சந்தனம், பால், மஞ்சள், இளநீர் மற்றும்  தயிர் உட்பட, 18 வகையான அபிேஷகங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம்  வழங்கப்பட்டது. அம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உடுமலை மாரியம்மன் கோவில், பிரசன்ன விநாயகர் கோவில், தில்லை நகர் சிவன் கோவில், காமாட்சியம்மன் கோவில், முத்தைய பிள்ளை லே–அவுட் சித்தி விநாயகர் கோவில் உட்பட அனைத்து கோவில்களிலும் ஆடி பவுர்ணமி சிறப்பு பூஜைகள் மற்றும் அபிேஷக ஆராதனைகள் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !