உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்து மாரியம்மன் கோவில் ராகுகால பூஜை ஆண்டு விழா

முத்து மாரியம்மன் கோவில் ராகுகால பூஜை ஆண்டு விழா

கோவை: சாய்பாபா காலனி கே.கே.புதுார் பாலசுப்ரமணியம் வீதியில் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ராகு கால பூஜை துவங்கிய, ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை முதல், நேற்று மாலை வரை சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று காலை, 10:30 மணிக்கு துர்க்கை அம்மன் வழிபாட்டு பூஜை நடந்தது. 11:00 மணிக்கு அபிஷேக பூஜையும், 12:30 மணிக்கு அலங்கார பூஜையும் நடந்தன. மாலை 5:00 மணிக்கு தீர்த்த குடம், பால்குடம், பன்னீர் குடம் ஊர்வலம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !