உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி சாய்பாபா கோவில்களில் குரு பவுர்ணமி பூஜை

திருத்தணி சாய்பாபா கோவில்களில் குரு பவுர்ணமி பூஜை

திருத்தணி: சாய்பாபா கோவில்களில், நேற்று நடந்த குரு பவுர்ணமி உற்சவத்தையொட்டி, திரளான பக்தர்கள் தரிசித்தனர். திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை, சாய்நகரில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில், நேற்று, குரு பவுர்ணமி உற்சவத்தையொட்டி, நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு சுப்ரபாதம், காகட ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, காலை, 8:00 மணிக்கு, மூலவருக்கு பால், பன்னீர் மற்றும் பஞ்சாமிர்தம் போன்ற அபிஷேகங்கள் நடந்தன. மதியம், 12:00 மணிக்கு, சத்யநாராயண பூஜை மற்றும் மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலை, 4:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, சத்குரு சாயி பஜனைகள் நடந்தன. இரவு, 7:00 மணிக்கு சந்திய ஆரத்தி மற்றும் உற்சவர் வீதியுலா நடந்தது. இதில், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். அதே போல், தலையாறிதாங்கல் கிராமத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலிலும் குரு பவுர்ணமியையொட்டி, மூலவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தன. திரளான பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !