தீவனூர் கோவிலில் இன்று திருவோண தீபம்
ADDED :3414 days ago
திண்டிவனம்: தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், இன்று திருவோண தீபம் ஏற்றப்படுகின்றது. திண்டிவனம்-செஞ்சி சாலையில் உள்ள தீவனுாரில் லட்சுமி நாராயணப்பெருமாள் கோவில் உள்ளது. மாதாந்தோறும், பெருமாளின் நட்சத்திரமான திருவோண நட்சத்திரத்தின் போது, கோவிலில் சிறப்பு பூஜை நடத்தி, திருவோண தீபம் ஏற்றப்படுவது வழக்கம். இதேபோல், திருவோண நட்சத்திரமான இன்று (௨௦ம் தேதி) மாலை ௬.௦௦ மணியளவில், கோவிலுக்கு எதிரிலுள்ள ௩௨ அடி உயர கல்மண்டபத்தில், திருவோண தீபம் ஏற்றப்படுகின்றது. ஏற்பாடுகளை, கோவிலின் பரம்பரை அறங்காவலர் முனுசாமி செய்து வருகிறார்.