உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆயிரங்கண் அலங்காரத்தில் கோட்டை மாரியம்மன்

ஆயிரங்கண் அலங்காரத்தில் கோட்டை மாரியம்மன்

அம்மாபேட்டை: ஆடி பவுர்ணமியை முன்னிட்டு, கோட்டை மாரியம்மன் ஆயிரங்கண் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சேலத்தில் பிரசித்தி பெற்ற, கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடிப்பண்டிகை மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆடி பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று அம்மனுக்கு ஆயிரங்கண் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதை காண ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து, நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக அதிகாலை, 3 மணி முதல் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !