உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வத்திராயிருப்பு சேதுநாராயணப்பெருமாள் திருக்கல்யாணம் கோலாகலம்!

வத்திராயிருப்பு சேதுநாராயணப்பெருமாள் திருக்கல்யாணம் கோலாகலம்!

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு சேதுநாராயணப்பெருமாள் கோயிலில் நடந்து வரும் பிரம்மோற்ஸவ விழாவில் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடந்தது. இக்கோயிலில் கடந்த 5 நாட்களாக பிரம்மோற்ஸவ விழா நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேதுநாராயணப் பெருமாள் திருமண வைபவம் நடந்தது.

அதிகாலை சுவாமிக்கும், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கும் சிறப்பு அபிஷேகம், திருமஞ்சன வழிபாடு நடந்தது. அதனை தொடர்ந்து சுவாமி வெண்பட்டு அணிந்து மணக்கோலத்தில் எழுந்தருளினார். அவரை பக்தர்கள் மாப்பிள்ளை அழைப்பு நடத்தி மணமேடைக்கு அழைத்து வந்தனர். பின்னர் தாயார் இருவரும் ஆரஞ்சு பட்டு அணிந்து மணமேடையில் எழுந்தருளினர். மாலை மாற்று வைபவமும், பூர்வாங்க சடங்குகளும் முடிந்தவுடன் பெருமாள் தாயார் இருவருக்கும் மாங்கல்யம் அணிவித்து மணம் முடித்தார். பக்தர்கள் பூக்களை துõவியும் கோவிந்தா கோஷமிட்டும் வழிபட்டனர். அதனை தொடர்ந்து நலங்கு வைபவம், பக்தர்களுக்கு அன்னதானமும் நடந்தது. பெண்களுக்கு தாலிக்கயிறு வழங்கப்பட்டது. சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோயில் சேவா சமிதி டிரஸ்ட் செயலாளர் நாராயணன், நிர்வாகிகள், கோயில் நிர்வாக அதிகாரி சுந்தர்ராஜன் ஏற்பாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !