ஆலங்குடியில் குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை துவக்கம்!
ADDED :3414 days ago
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த ஆலங்குடியில், ஏலவார்குழலி சமேத ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. இது, நவக்கிரகங்களில் குரு பரிகார தலமாக விளங்குகிறது. இந்த ஆண்டு குரு பெயர்ச்சி, ஆகஸ்ட், 2ம் தேதி நடக்கிறது. அதை முன்னிட்டு, இரண்டு கட்டங்களாக லட்சார்ச்சனை நடைபெறுகிறது. முதல் கட்ட லட்சார்ச்சனை, இன்று முதல், 28ம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாம் கட்டமாக, ஆகஸ்ட், 4 முதல், 11 வரை நடைபெறுகிறது.