உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகமுத்து மாரியம்மன் கோவிலில் நாளை செடல் திருவிழா

நாகமுத்து மாரியம்மன் கோவிலில் நாளை செடல் திருவிழா

புதுச்சேரி: நைனார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவில் செடல் திருவிழா நாளை நடக்கிறது. நைனார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவிலில் 33ம் ஆண்டு செடல் திருவிழா உற்சவம் கடந்த 14 ம் தேதி துவங்கி, நடந்து வருகிறது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்து வருகிறது. இன்று விநாயகர், நாகமுத்து மாரியம்மன், முருகன் வள்ளி தெய்வானையுடன் சுவாமி வீதி உலா நடக்கிறது. நாளை, முத்து மாரியம்மன் கோவிலிலிருந்து காலை 9.௦௦ மணிக்கு பூங்கரகம் எடுத்து, நாகமுத்து மாரியம்மன் கோவிலுக்கு சென்று அம்மனுக்கு செடல் அணிவித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு செடல் அணிந்து நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். அம்மன் அலங்காரத்துடன் தேர்பவனி, செடல் ஊர்வலம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் பாஸ்கர் எம்.எல்.ஏ., மற்றும் கோவில் சிறப்பு அதிகாரி பழனிசாமி ஆகியோர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !