சாமுண்டீஸ்வரி கோவிலில் 27 நாள் சண்டி ஹோமம்: இன்று துவக்கம்
ADDED :3374 days ago
ஈரோடு: ஈரோடு அருகே நஞ்சை ஊத்துக்குளி சாத்தப்பூர் ஆதிபெரிய சாமுண்டீஸ்வரி கோவிலில், 27 நாட்களுக்கு மண்டல சண்டிஹோமம் இன்று முதல், ஆக., 18ம் தேதி வரை, 27 நாட்களுக்கு நடக்க உள்ளது. மக்கள் நல்வாழ்வுக்காக, நீர்வளம், நிலவளம் செழிக்க, இந்த ஹோமம் நடத்தப்படுகிறது. குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் தனித்தனியாக, ஒருநாள் ஹோமம் நடக்கும். தினமும் காலையில் விக்னேஷ்வர பூஜை, சங்கல்பம், தேவி மஹாத்மிய பாராயணமும் நடக்கும். இந்த ஹோமங்களை, புதூர் பத்மநாப ஐயர் தலைமையில், சிருங்கேரி ஸ்ரீவித்யா உபாசகர்கள் நடத்துகின்றனர்.